டெல்லியில் தனது மகளுடைய காதலனின் தந்தையை பெண் ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் தன்னுடன் வசித்து வந்த காதலி ஷ்ரேத்தா வாக்கரை அவரது காதலன் அப்தாப் படுகொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காதல் என்கிற பெயரில் இது போன்ற கொடூரங்களில் பெண்கள் சிக்குவதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது பெண் ஒருவர் மேடையில் ஏறி தனது மகளை ஏமாற்றி காதல் என்கிற பெயரில் இளைஞர் ஒரு கடத்திச் சென்றதாக தனது குமுறலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் இருந்த அந்த காதலனின் தந்தை, தனது மகன் குறித்து பேசவிடாமல் தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை தான் அணிந்திருந்த காலணியை கழற்றி தாக்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.







