உலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் -கனிமொழி எம்.பி

உலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என இளம் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மற்றும் மணிமுத்தாறு அகத்திமலை மக்கள் சார் இயற்கை வன காப்பு…

உலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என இளம் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மற்றும் மணிமுத்தாறு அகத்திமலை மக்கள் சார்
இயற்கை வன காப்பு மையம் ஆகியன இணைந்து வண்ணத்துப்பூச்சி திருவிழாவை நடத்தியது. தொடர்ந்து விழாவில் பேசிய கனிமொழி, பட்டாம்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக புகைப்பட கண்காட்சி நடத்தப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்தார்.

இளம் வாக்காளர்கள் உலகை பாதுகாக்காதவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் எனற உறுதி ஏற்க வேண்டும் எனவும் மாணவ- மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார். காலநிலை மாற்றத்தினால் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. மாசு தரும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தற்போது சாப்பிடும் உணவிலும் காற்றிலும் கூட பிளாஸ்டிக் கலந்துள்ளது. வீட்டுத் தோட்டங்களில் கூட மருந்துகளால் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. வல்லநாடு வனப்பகுதியில் 100 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக வனத்துறையினர்
தெரிவித்தனர். இளம் வாக்காளர்கள் உலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.