எரிமலையில் சமைக்கப்பட்ட பீட்சாவை ருசிக்கும் வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள சிறிய நாடு குவாத்தமாலா. இங்கு உள்ள சுழல்வடிவ எரிமைலை அடிக்கடி வெடித்து வருகிறது. இந்த எரிமைலையில் பீட்சா சமைத்து சாப்பிடும் வீடியோவை இணையத்தில் பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
குவாத்தமாலா சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ப்ளாட்ஜெட் என்ற பெண் பகிர்ந்துள்ள வீடியோவில் அந்த எரிமலை கடைசியாக 2021ஆம் ஆண்டு வெடித்ததாக தெரிவித்துள்ளார். நல்ல சுவையான பீட்சா சாப்பிட வேண்டும் என்றால் குவாத்தமாலா எரிமலைக்கு வாருங்கள் என தனது சப்ஸ்கிரைபர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.







