ரயிலில் மோசமான உணவு வழங்கப்பட்டது குறித்த பெண் பயணி ஒருவரின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பூமிகா என்ற பெண் பயணி ஒருவர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறி ஐஆர்சிடிசி-ஐ டேக் செய்து கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த ட்விட்டர் பதிவில், ஒருமுறையாவது இந்த உணவை நீங்கள் ருசித்துப் பார்த்துள்ளீர்களா ஐஆர்சிடிசி?. இதுபோன்ற மோசமான, ருசியற்ற உணவை உங்கள் குடும்பத்தினருக்கு அல்லது குழந்தைகளுக்கு வழங்குவீர்களா?. சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவைப் போல இது உள்ளது. நாளுக்குநாள் டிக்கெட் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறாது. ஆனால், மோசமான உணவை தான் நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
Have you ever tasted your own food @IRCTCofficial ? Will you ever give such bad quality and taste to your own family and children? It tastes like food for prisoners. The ticket prices are increasing day by day but you are providing same bad quality food to your customers. pic.twitter.com/GJYJ0eWfXP
— Bhumika (@thisisbhumika) February 12, 2023
இந்தப் பதிவு ஐஆர்சிடிசி ஊழியர்களை குறிப்பிட்டு சொல்வதற்காக பதிந்தது அல்ல. இது அவர்களுடைய தவறும் இல்லை. ஐஆர்சிடிசி உணவை டெலிவரி செய்யும் பணியை மட்டுமே அவர்கள் செய்கின்றனர். உணவுப் பிரிவு ஊழியர்கள் எங்களது பணத்தை திரும்பக் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், அது அவர்களது தவறு அல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு மீது சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் வசம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி பதில் அளித்துள்ளது.
-ம.பவித்ரா







