முக்கியச் செய்திகள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்று சென்னையில் மலர் கண்காட்சி: தமிழக அரசு அறிவிப்பு

ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னையில் முதல்முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. 

சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக மலர் கண்காட்சியை நடத்தவுள்ளது. புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான மலர்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.

கருணாநிதி உருவ வடிவில் மலர் அலங்காரம் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் இந்த மலர் கண்காட்சி வடிவமைக்கப்படுகிறது. இக்கண்காட்சியை ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட தமிழக அரசு ஏற்பாடு வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

வட துருவத்தின் வான்வழியாக ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்; இந்திய விமான வராலாற்றில் புதிய சாதனை!

Saravana

விவசாயி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்!

Saravana Kumar

குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி எந்த தலைவரும் சொல்லாதது : சைதை துரைசாமி!

Gayathri Venkatesan