பேருந்தில் அத்துமீறல் என வீடியோ வெளியிட்ட பெண் கைது…!

கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், பேருந்து பயணத்தின் போது ஒருவர் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த விடியோவில் குற்றசாட்டுக்குள்ளான தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக் என்பவர் அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பிரபலமடைய வேண்டுமென்றே போலியாக குற்றசாட்டை முனவைத்து விடியோ வெளியிட்டுள்ளதாக ஷிம்ஜிதாவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து ஷிம்ஜிதா தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட தீபக்கின் குடும்பத்தினர் அளித்தனர். மேலும் இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை கேரள காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.