விராட் கோலி அசத்தல்…. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி……..!

நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில்  இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்துள்ளது.

தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 91 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல் கேப்டன் ஷுப்மன் கில் 56 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணியில் கையில் ஜேமீசன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட இத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியானது  ஜனவரி 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.