தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், அதிகாரிகள், அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணியாகும்.
அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 ஆணையர் பொறுப்பிடங்கள் கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்து தற்போது வரை காலியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் 2 முறை புதிய தகவல் ஆணையர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெற்றது.
இதற்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முன்னாள் ஏடிஜிபி தாமரைக் கண்ணன், பிரியா குமார், திருமலை முத்து, எம்.செல்வராஜ், ஆகிய நான்கு பேரும் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.







