‘ராமாயணா’ படத்தின் ட்ரெய்லர் இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது. நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் ராமாயணம் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்த நிலையில் இதன் முதல் பாக படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்-ஷும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரெய்லர், கடந்த 24ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரமாண்டமான காட்சிகளுடனும் பிரம்மிக்க வைக்கும் கிராஃபிக்ஸ்களுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உலகளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.




