26.1 C
Chennai
November 29, 2023
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

2025 முதல் Windows 10 செயல்படாது! – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!

ஒரு கணினியின் செயலாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கணினியினுள் உள்ள அடிப்படை மென்பொருளான OS எனப்படும் Operating System தான். ஒரு கணினியை முழு பயன்பாட்டில் இயக்குவதற்கும் பிற மென்பொருள்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கும் இதுவே உதவுகிறது.

முதல் OS ஆன Windows 1, நவம்பர் 20 1983இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸால் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது அவரது வாழ்க்கையையே மாற்றும் ஒரு நிகழ்வாக அமைந்தது என்றே கூறவேண்டும். அதன் பின் Windows 95 (August 1995), Windows 2000 (February 2000), Windows XP (October 2001), Windows Vista (November 2006), Windows 7 (October, 2009), Windows 8.1, என காலப்போக்கில் புதுப்பிக்கப்பட்டு வெளிவந்த பல்வேறு OS-களை கடந்து வந்து, தற்போது Windows 10-ஐ நாம் கணினியில் பயன்படுத்தி வருகிறோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போது 2025 முதல் இந்த Windows 10 செயல்படாது என்று வெளியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Windows 10-க்கு மாற்றாக எதை பயன்படுத்துவது என அனைவரும் குழம்பியிருந்த நிலையில், அதற்கு பதிலாக வரும் ஜூன் 24 ஆம் தேதி Windows 11 அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ள செய்தி பலரையும் இன்ப அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா ஏற்கனவே இந்த ஆண்டின் பில்ட் டெவலப்பர் மாநாட்டில் தனது உரையின் போது எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் விண்டோஸ் OS குறித்து பகிர்ந்துள்ளார். “கடந்த பல மாதங்களாக அதை தானே சுயமாக சோதனை செய்து வருவதாகவும், அது ‘அடுத்த தலைமுறையினருக்கான விண்டோஸாக அமையும்’ ” என்றும் அவர் கூறினார்.

இது ஒரு புறம் இருக்க, விரைவில் வெளியாகவுள்ள Windows 11 உபயோகம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த ஜூன் 15ஆம் தேதி சீன இணையதளமான பைடு டைபாவின் பயனர் ஒருவர் Windows 11 புதிய பதிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களை இணையத்தில் கசியவிட்டுள்ளார். இது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், Windows 11-ல் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள், ஆப்பிளின் OS ஆன IOS-ஐ ஒத்துள்ளது என்றும் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy