விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வோன்ட்ரோசோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர், தரவரிசையில் 42-வது இடத்தில் உள்ள செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோன்ட்ரோசோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடிய மார்கெட்டா வோன்ட்ரோசோ 6க்கு4, 6க்கு4 என்ற நேர்செட்டில் ஆன்ஸ் ஜாபியரை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இந்த வெற்றியின் மூலம் மார்கெட்டா தமது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.







