விவசாய நிலத்தில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் வெளியான தீ பிழம்பு; வைரலாகும் வீடியோ!

ஆந்திரா மாநிலத்தில் கிராமத்தில் விவசாய நிலத்தில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து இயற்கை எரிவாயுடன் தீ பிழம்பு பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில்,…

ஆந்திரா மாநிலத்தில் கிராமத்தில் விவசாய நிலத்தில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து இயற்கை எரிவாயுடன் தீ பிழம்பு பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில், இறால் பண்ணை நடத்தி வரும் விவசாயி ஒருவர், தம்முடைய ஆழ்துளை கிணற்று மோட்டாரை ஆன் செய்துள்ளார்.

https://twitter.com/jsuryareddy/status/1680108388582318081?s=20

அப்போது ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர், இயற்கை எரிவாயு, தீப்பிழம்பு ஆகியவை வெளியே வந்தன. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் பீறிட்டு வெளியேறும் இயற்கை எரிவாயு மற்றும் தீப்பிழம்பை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

https://twitter.com/xpressandhra/status/1680105865477763072?s=20

இந்த இடத்தின் அருகாமையில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு ஆழ்துளை கிணறு உள்ளதால், அங்கிருந்து வெளியேறும் இயற்கை எரிவாயு நிலத்தடி வழியாக வெளியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.