கருணாநிதி சொல்லிதான் தமிழ்நாட்டுல் தொழில் தொடங்கினோம் என நூலக திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மதுரை புது நத்தம் சாலையில் ரூ.206 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) திறந்து வைத்தார்.
காமராஜர் பிறந்த நாளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நூலக திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாக ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடாரும், அதன் தலைவர் ரோஷினி நாடாரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஷிவ் நாடார் பேசும்போது, “கலைஞரை எனக்கு நன்றாக தெரியும். அவரை ஐந்து முறை சந்தித்து பேசியுள்ளேன். வசீகரமான பேச்சாளர். கருணாநிதி சொல்லிதான் தமிழ்நாட்டுல் தொழில் தொடங்கினோம்.
நீங்க டெல்லிக்கு போய்ட்டீங்க தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லையா என்று கேட்டார். அதன்பிறகு தான் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் எச்.சி.எல் அலுவலகத்தை துவங்கினோம். நூலகத்தில் கலைஞர் எழுதிய புத்தகங்கள் நிறைய உள்ளது” என்று தெரிவித்தார்.







