விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் எலேனா

விம்பிள்டன் டென்னிஸ் 2022 சாம்பியன் பட்டத்தை கஜகஸ்தான் வீராங்கனை எலேனா ரிபாக்கினா வென்றார். டென்னிஸ் வீரர்களின் கனவான கிராண்ட்ஸ்லாம் 2022 என்ற உயரிய அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.…

விம்பிள்டன் டென்னிஸ் 2022 சாம்பியன் பட்டத்தை கஜகஸ்தான் வீராங்கனை எலேனா ரிபாக்கினா வென்றார்.

டென்னிஸ் வீரர்களின் கனவான கிராண்ட்ஸ்லாம் 2022 என்ற உயரிய அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று சாம்பியன் பட்டத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினாவிற்கு இடையே பலபரீட்சை இன்று நடந்தது.

இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பான தொடங்கிய இந்த போட்டியில் துனிசியா வீராங்கனை மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை இருவரும் கடுமையாக மோதி கொண்டனர். இறுதியில் ஒன்ஸ் ஜெபயுர்- ஐ 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கஜகஸ்தான் வீராங்கனை எலேனா ரிபாக்கினா சாம்பியன் பட்டம் வென்றார்.

இது கஜகஸ்தான் நாடு வாங்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.