முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஹங்கேரியின் ஃபுக்சோவிக்ஸை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் கனடாவின் சபவலோவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

இதே போல், மற்றொரு அரையிறுதிப்போட்டியில் இத்தாலியின் பெரெட்டினி, போலந்தின் ஹர்காஸ் மோதுகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

‘எங்கள் கல்யாணம் ‘மாஸ்க்’ கல்யாணம்’

ஹர்திக் பாண்டியா , ரவீந்தர ஜடேஜா இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து; பிசிசிஐ தலைவர் கங்குலி புகழாரம்!

Dhamotharan