ஓசூர் அருகே பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அந்தேவனப்பள்ளியை சேர்ந்த வேலு (51), அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவர் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அன்பரசன் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் நடத்திய ஆய்வில், வேலு போலி மருத்துவர் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.







