“இந்தியாவில் மருதாணி போட்டுக் கொள்ள விருப்பம்” – தென் கொரிய பாடகி #Hyolyn!

இந்தியாவில் மருதாணி போட்டுக்கொள்ள விரும்புவதாக தென் கொரிய பாடகி ஹியோலின் தெரிவித்துள்ளார். தென்கொரிய பாடகிகளில் பிரபலமானவர் ஹியோலின் (33). இவரின் வசீகரமான குரலால் மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதில் இவர் பெயர் போனவர். இவர் கடந்த…

இந்தியாவில் மருதாணி போட்டுக்கொள்ள விரும்புவதாக தென் கொரிய பாடகி ஹியோலின் தெரிவித்துள்ளார்.

தென்கொரிய பாடகிகளில் பிரபலமானவர் ஹியோலின் (33). இவரின் வசீகரமான குரலால் மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதில் இவர் பெயர் போனவர். இவர் கடந்த 2010 இல் ‘சிஸ்டார்’ என்ற பெண் குழுவின் உறுப்பினராக இணைந்து தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர அதன் துணைப் பிரிவான சிஸ்டார் 19 க்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து, 2017 இல் குழு கலைக்கப்பட்ட பிறகு, சோலோ பாடகராக வலம் வருகிறார்.

இந்த சூழலில், இந்த வார இறுதியில் மும்பை மற்றும் பெங்களூரில் நடைபெறும் கே-வேவ் விழாவில் தென் கொரிய பாடகி ஹியோலின் பாடவுள்ளார். இதன் மூலம் இவர் முதல்முறையாக இந்தியா வருகை தரவுள்ளார்.

இது குறித்து தென்கொரிய பாடகி ஹியோலின் கூறியதாவது,

“நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தியாவில் நிகழ்ச்சி நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் இந்தியாவில் உள்ள எனது ரசிகர்கள் அனைவரையும் என்னால் சந்திக்க முடியும். நான் இந்தியாவில் மருதாணி போட்டுக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு எப்போதுமே அதில் ஆர்வம் உண்டு. இந்த விழாவின் மூலம் எனது அடையாளத்தை வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். நான் இசையில் சிறந்து விளங்கும் ஒரு கலைஞனாக இருக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு தென் கொரிய பாடகி ஹியோலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.