முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா விளையாட்டு

ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவாரா விராட் கோலி?

ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக ஒருவரை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாத, சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்ரிக்கா அணியின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காக விராட் கோலியும், இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காக டேவிட் மில்லரும், சிறந்த வீரருக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மூவருக்குமான வாக்கெடுப்பு தற்போது இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. தங்களை கவர்ந்த வீரர்களுக்கு ரசிகர்கள் வாக்களிப்பதன் மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதேபோல் மகளிர் கிரிக்கெட்டில், இந்தியாவின் ஜெமிமா ரோட்ரீகஸ், தீப்தி ஷர்மா மற்றும் பாகிஸ்தான் அணியின் நிடா டார் ஆகியோருக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களின் விவரம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான வீரர்களுக்கு வாக்களித்து, அவர்களை இந்த மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏடிஎம் கொள்ளை: பண இருப்பை கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்

Vandhana

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் – காரணம் இதுதான்..?

Web Editor

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

G SaravanaKumar