இபிஎஸ் – ஓபிஎஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். தனித்தனியே வரவேற்கின்றனர். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். தனித்தனியே வரவேற்கின்றனர்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும பிரதமர் மோடி இன்று சென்னை வருகை தரவுள்ளார். இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா முடிவடைந்தவுடன், ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் பிரதமர் மோடி, பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஐ.என்.எஸ் அடையாறில் ஓ.பன்னீர்செல்வமும் வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் பிரதமரை சந்திக்க இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினர் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமருடன் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஆகியோர் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. இன்று நேரம் ஒதுக்கப்படாதபட்சத்தில் நாளை பிரதமர் மோடி புறப்படும் முன்பாக விமான நிலையத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விருந்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவில்லை. இந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்குவாரா என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.