இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி 20 தொடரை 4 – 0 என்கிற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டிகள் இன்று தொடங்குகிறது. அதன் படி முதல் போட்டியில் இன்று நடைபெறுகிறது. பர்மிங்காமில் நடைபெறும் இப்போட்டி இன்று மதியம் 3 : 30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.
டி 20 தொடரில் இந்தியா அடைந்த படுதோல்வி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒரு நாள் போட்டிகளில் கோலி, ரோகித் மற்றும் பும்ரா ஆகியோர் வரவால் பலம் பெறும் இந்திய அணி இங்கிலாந்தை பழி தீர்க்குமா என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




