ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன் படி இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
டெக்சாஸ், ஆர்லிங்டனில் உள்ள டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக காலியிறுதி போட்டிகளில் மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸும், பெல்ஜியத்தை வீழ்த்தி ஸ்பெயினும் அரையிறுதிக்குள் நுழைந்தன.
இதுவரை இரு அணிகளும் 38 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ஸ்பெயின் 18 வெற்றிகளும், பிரான்ஸ் 13 வெற்றிகளும் பெற்றுள்ளன; 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.




