“சீரமைப்பு இல்லாத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்” – அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

சீரமைப்பு இல்லாத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. 6000 காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். வரும் 15-ம் தேதி முதல் 6000 காவலர்கள் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை மாநகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம் அதற்கான அறிவிப்பை வெளியிடும். பக்தர்களின் வசதிக்காக மாநகர முழுவதும் ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சீரமைப்பு இல்லாத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். பழைய கட்டிடங்கள் என்பதனால் மேலே ஏறி யாரும் நிற்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். ஸ்டாலின் மிஷாவில் தான் கைதானாரா ? திமுக ஏன் இவ்வளவு ரியாக்ட் செய்கிறார்கள். detention copy இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின் ஆக தான் இருக்கும். ஸ்டாலின் மிஷாவில் கைதாகவில்லை வேறு ஏதற்கோ கைதாகி உள்ளார்.

சட்டமன்றத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். தமிழக முதல்வர் லண்டனுக்கு சென்று இருப்பது தொழிற்துறைக்கான ஒரு கூட்டம் அப்போது சிறந்த கார் ரேசராக இருக்கக்கூடிய அஜித்குமாரை அவர் சந்திப்பார். விஜபி மற்றும் பொதுமக்கள் பாஸ் வழங்குவது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிப்பார்கள்.

கோவில் மேல் தளத்தில் செல்பவர்களுக்கு 2,000 பாஸ் வழங்கப்பட உள்ளது. செப்.16 ஆம் தேதி மாநகரப் பகுதியில் உள்ள தேர்ந்தெடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்து ஒரே சமயத்தில் பக்தர்கள் வெளியே வராத வண்ணம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. சீரமைப்பு இல்லாத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். பழைய கட்டிடங்கள் என்பதனால் மேலே ஏறி யாரும் நிற்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.