நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பதில் சொல்லுமா? – திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில்,  மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம்…

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில்,  மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு புறம் நீங்கா குரல்களும், போராட்டங்களும் எழுப்பப்பட்டு வந்தாலும்,  நீட் தேர்வை தடை செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எங்கும் மேற்கொள்ளப்படவில்லை.  மாறாக, தேர்வு எழுதுவதற்கான கறார் கட்டுப்பாடுகள் தான் தேர்வுக்கு தேர்வு மேம்படுத்தப்பட்டு கொண்டே போகிறது.  பலத்த சோதனைகளுக்கு மத்தியிலும்,  நேரக் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியிலும் நடைபெறும் நீட் தேர்விலும் முறைகேடு நடைபெறுகிறது என்பது மிகப்பெரிய அதிர்ச்சிதரும் விஷயம்தான்.

கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.  24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களின் மருத்துவ கனவுகளை நிறைவேற்றும் முதல்படியான இந்த நீட் தேர்விவை எழுதினர்.

இதில்,  குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் துஷார் பட்.  இவர் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வு மைய துணைக் கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் கண்காணிப்பாளராக உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த 16 மாணவர்களிடம் உதவி செய்வதாக கூறி,  “நீட் தேர்வில் விடை தெரியவில்லை என்றால்,  அதனை அப்படியே வைத்து விடுங்கள்.  அதில் சரியான பதில் நிரப்பப்படும்” என்று கூறியுள்ளார்.  இதற்காக, ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் ரூ. 10 லட்சம் பேரம் பேசியுள்ளார்.  இந்நிலையில், இதற்காக முன்பணமாக ஒரு மாணவரிடமிருந்து ரூ 7 லட்சம் பெற்றுள்ளார்.

இந்நிலையில்,  இவர் முறைகேடில் ஈடுபடுகிறார் என மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளது.  அதன்பேரில் தேர்வு மையத்திற்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர் துஷாரின் கையில் இருந்த செல்போனை சோதனை செய்துள்ளனர்.  அதில், இந்த 16 மாணவர்களின் தேர்வு எண் மற்றும் அனைத்து விவரங்களும் இருந்துள்ளது.

தொடர்ந்து துஷார் பட்டினின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவரும்,  இவருக்கு உறுதுணையாக இருந்த மேலும் இருவர் என மொத்தம் 3 பேரை கோத்ரா தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர். நீட் தேர்வில் முறைக்கேடு என்பது இது முதல் முறை அல்ல. முன்னதாக,  பீகாரில் 13 பேர்,  ராஜஸ்தானில் 4 பேர்,  டெல்லியில் 3 பேர் என நீட் தேர்வில் முறைக்கேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளரே இம்முறைக்கேடில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கோள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில் குறிபிட்டுள்ளதாவது:

குஜராத்தில் 3 பேர்,  பீகாரில் 13 பேர்,  ராஜஸ்தானில் 4 பேர்,  டெல்லியில் 3 பேர் என நீட் தேர்வில் மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்..

முறைகேடுகளை தடுக்கத்தான் நீட் தேர்வு என்று சொல்லும் பாஜக,  அவர்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் நடந்த இத்தகைய முறைகேடுகளுக்கு பொறுப்பேற்குமா?

இத்தனை ஆண்டுகளாக நம் வீட்டு பிள்ளைகள் தகுதி இருந்தும் தங்கள் மருத்துவராகும் கனவை நனவாக்க முடியாமல் போனதற்கு மத்திய அரசு பதில் சொல்லுமா?

நாங்கள் நீட்டை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்திய போதெல்லாம் எள்ளி நகையாடியவர்கள் இப்போது மவுனம் காப்பதேன்?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.