தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி!

தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்…

தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார். 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் சரூர்நகரில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். கூட்டத்திற்கு பின்னர் தெலங்கானா மாநில போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றில் மக்களோடு மக்களாக பயணம் செய்தார். அவருடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் பேருந்தில் பயணித்தார்.

இதையும் படியுங்கள் : பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்ந்ததாக பரவும் செய்தி தவறானது – NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!

அப்போது பேருந்தில் பயணித்த மக்களிடம், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அதனை ராகுல் காந்தி விளக்கிக் கூறினார். மேலும், தெலங்கானாவில் நடைமுறையில் இருக்கும் இலவச பேருந்து பயண திட்டம் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.