கிராமத்திற்குள் கூட்டம் கூட்டமாக ஊடுருவும் காட்டு யானைகள்; அச்சத்தில் மக்கள்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி, அருள்வாடி கிராமத்திற்குள் கூட்டம் கூட்டமாக ஊடுருவும் கர்நாடக காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம்10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி,…

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி, அருள்வாடி கிராமத்திற்குள் கூட்டம்
கூட்டமாக ஊடுருவும் கர்நாடக காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம்10 வனச்சரங்கள் உள்ளன. இந்த
வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வனவிலங்குகள்
வசித்து வருகின்றன.வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய
தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது .

இந்த நிலையில் இன்று மதியம் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட அருள்வாடி
கிராமம் தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. கர்நாடக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழகவனப் பகுதியை ஒட்டி உள்ள அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனர்.
விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகள் ஊருக்குள் புகாதவாறு 5 மணி நேரமாக போராடி
மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். வனத்துறையினர் யானை
கூட்டங்களை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யானைகள்
புகாதவாறு அகழிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே பண்ணாரி சோதனை சாவடி அருகே வீசி எறியப்பட்ட கரும்புகளை உண்ண வந்த இரண்டு காட்டு யானைகள் ஒரு மணி நேரமாக முகாமிட்டதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.