முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சரின் பயோபிக்கில் உதயநிதி நடிக்க வேண்டும்- வடிவேலு

முதலமைச்சரின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் என மதுரையில் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. ஏழு நாட்கள் நடைபெறும் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த புகைப்படக்கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். முன்னதாக ப்படக்கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் வடிவேலுவை அமைச்சர் மூர்த்தி வரவேற்றார். புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அவரது சிறுவயது படங்கள் முதல் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு காலகட்ட புகைப்படங்களை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்.


தொடர்ந்து நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைத்தது எனக்கு பெருமை. இங்கே இருப்பது அனைத்தும் படம் இல்லை. எல்லாம் உண்மை. முதலமைச்சரின் படங்களை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். வாழ்க்கையில் எல்லாவற்றையும் தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார். தன்னம்பிக்கை, தைரியம், உழைப்பு அவரை உயர்த்தி உள்ளது.ஒவ்வொரு படங்களும் வரலாறை சொல்கிறது. இளைஞர்கள் பெரியவர்கள் அனைவரும் முதல்வரின் வாழ்க்கை வரலாறு புகைப்படத்தை பார்க்க வேண்டும்

மிசா காலத்தில் சிறைவாசம் அணிவித்ததை தத்துரூபமாக வைத்துள்ளனர். முதலமைச்சரின் வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் ஸ்டாலினின் கதையில் உதயநிதி ஸ்டாலின் தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம் என்றார். அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, விரைவில் காலம் அதற்கு பதில் சொல்லும் நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருவாரூர் கமலாலயம் குளத்தில் படகில் பயணம் செய்த முதலமைச்சர்!

Jayasheeba

நாடாளுமன்றத்தில் ஜனநாயக மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகிறது: சோனியா காந்தி

Arivazhagan Chinnasamy

ஐபிஎல் 2023 – புதிய ஜெர்சியை வெளியிட்டது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

Web Editor