ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியிலிருந்து காட்டுயானைகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் மல்லானூர் அருகே பருத்திக்கொல்லை பகுதியில் இரண்டு காட்டு…

திருப்பத்தூர் அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியிலிருந்து காட்டுயானைகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் மல்லானூர் அருகே பருத்திக்கொல்லை பகுதியில் இரண்டு காட்டு
யானைகள் தாக்கியதில் 4 பேர் உயிா் இறந்துள்ள நிலையில், தற்போது இந்த காட்டு யானைகள் திருப்பத்தூர் மாவட்டம் தமிழக எல்லை பகுதியான கொத்தூர், காந்திநகர் தொட்டிகிணறு வழியாக கனகநாச்சியம்மன் கோயில் பகுதிகளுக்கோ அல்லது அதையொட்டி உள்ள புல்லூர் ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கோ நுழைய வாய்ப்புள்ளதாக வனத்துறை எச்சரித்துள்ளது.

எனவே இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாடாமல் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.