குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டுயானை -மக்கள் அச்சம்!

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில்  முகாமிட்டுள்ள காட்டுயானையால் கிராம  மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் தேயிலை தோட்ட குடியிருப்பில் கடந்த நான்கு நாட்களாக ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளது. இதனால் கிராம…

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில்  முகாமிட்டுள்ள காட்டுயானையால் கிராம  மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் தேயிலை தோட்ட குடியிருப்பில் கடந்த நான்கு நாட்களாக ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அந்த காட்டு யானையை கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காட்டுயானை ஆக்ரோஷத்துடன் துரத்துவதால் பொதுமக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.