மயிலாடுதுறை – சேலம் நேரடி ரயில் சேவை தொடக்கம் : இனிப்பு வழங்கி பயணிகள் கொண்டாட்டம்!

மயிலாடுதுறை சேலத்திற்கு புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒருங்கிணைத்து ஒரே ரயில்…

மயிலாடுதுறை சேலத்திற்கு புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்களை
ஒருங்கிணைத்து ஒரே ரயில் சேவையாக (மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ்) ரயிலாக
இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்த ரயில் சேவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்த புறப்பட்ட ரயில் இன்ஜின் முன்புறம் மாலை அணிவித்து பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு திரண்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். மேலும்  அந்த  ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டார்.

இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு
கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு
சென்றடைகிறது.பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம்
சென்றடைகிறது. அதேபோல் மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு
புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது .பின்னர் இரவு 9.40 மணிக்கு
மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று
செல்லும்.

சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரயில், இனி மயிலாடுதுறை வரை
இயக்கப்படவுள்ளது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்களிடையே மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.