தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றமா?

புதுச்சேரி, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாற்றப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகள் வகித்த கே.எஸ்.அழகிரி, 2019ஆம்…

புதுச்சேரி, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாற்றப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகள் வகித்த கே.எஸ்.அழகிரி, 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். நாடாளுமன்ற தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது . தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் (2021) 25 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள்,18 இடங்களிலும் வெற்றி வாகை சூடினர்.

மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரின் பதவி காலம் சராசரியாக 3 ஆண்டுகள் என்ற நிலை இருந்தாலும், 4 ஆண்டுகளை கடந்தும் பதவியில் உள்ளார் கே.எஸ்.அழகிரி. அகில இந்திய காங்கிரஸ் தலைமை அளிக்கும் பணிகளை 5 மாநில தலைமைகளே முழுமையாக செய்து முடிப்பதாகவும்,, அதில் கே எஸ் அழகிரியும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரலாற்றில் கடந்த 20 ஆண்டுகளில் 4 ஆண்டுகளாக தொடர்ந்து தலைவராக பதவி வகித்து வருகிறார் அழகிரி .

தமிழ்நாட்டில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதுடன், தலைவர் பதவிக்கான தேர்வாக சசிகாந்த், செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், விஜயதாரணி, ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வரை கேஎஸ். அழகிரியை தலைவராக நீட்டிக்க காங்கிரஸ் தலைமை ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவரை மாற்ற முடிவு செய்தால் மேற்கண்டவர்களில் ஒருவர் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.