ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள்!

சத்தீஸ்கரில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.  சத்தீடீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ்…

சத்தீஸ்கரில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். 

சத்தீடீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகேல் இருந்து வருகிறார். இவர் மாநிலத்தில் கல்வியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அண்மையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்து வந்தது.

இந்நிலையில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சத்தீஸ்கர் ராய்பூரிலிருந்து மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.