முக்கியச் செய்திகள் குற்றம்

நெல்லையில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்

நெல்லையில் ஃபேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்துகொண்டவரை சேர்த்து வைக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. கணவரை ஒரு விபத்தில் இழந்த இந்துமதி தனது பெண் குழந்தையுடன் அவருடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன் என்பவருடன் இந்துமதி முகநூல் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் பாஸ்கரன் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் இந்துமதியின் வீட்டிலேயே இருவரும் வசித்துவந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற பாஸ்கரன் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்துமதி, தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டி.எஸ்.பி. அலுவலகம் என பல இடங்களில் புகார் அளித்துள்ளார்.

இறுதியில் அம்பாசமுத்திரம் மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து நடத்திய விசாரணையில், பாஸ்கரன் குடும்பத்தினரே அவரை மறைத்து வைத்து நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களை எச்சரித்த போலீசார் இந்துமதியும், பாஸ்கரனும் சேர்ந்து வாழ அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாஸ்கரன் மீண்டும் காணாமல் போனதால் விரக்தியடைந்த இந்துமதி தனது தாயார் மற்றும் இரு குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அருகே இருந்த காவலர்கள் இந்துமதியை தடுத்து நிறுத்தி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்: முதல்வர்!

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு 2வது முறை கொரோனா தொற்று!

Halley karthi

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் அதிகாரி

Halley karthi