ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

ரேஷன் கடைகளில் ஒரே ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதால் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளதால், அவர்களை பணியிடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரே…

ரேஷன் கடைகளில் ஒரே ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதால் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளதால், அவர்களை பணியிடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரே ரேஷன் கடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஊழியர்கள் பணிபுரிந்து வருவதால் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரேஷன் கடைகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாளர்களை மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களையும் ஆண்டுக்கு ஒரு முறை இட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலம் நிறவடையும் வரை ரேஷன் கடை பணியாளர்களை இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, பணியாட்களின் தேவையை பொறுத்தும் ஊழியர்கள் மீது எழும் புகாரின் அடிப்படையிலும் தேவைப்படும் ரேஷன் கடைகளை தவிர்த்து பிற கடைகளில் பணியாட்களை மாற்றவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ரேஷன் கடை பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கடையில் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது எனவும், மீறி 3 ஆண்டுகளுக்கு மேல் ஊழியர்கள் பணிபுரிந்தால் அப்பகுதியின் துணை பதிவாளர் ( பொதுவிதி ) மற்றும் இணை பதிவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.