மகளிர் உரிமைத்தொகையை முன் கூட்டியே வழங்கியது ஏன்…? – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…..!

தேர்தலைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சியின் காரணமாகத்தான் குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கப்பட்டது என்று முதலைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது ‘பூமராங்’ ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்” என்று கூறியுள்ளார். 

மகளிர் உரிமைத்தொகையை முன் கூட்டியே கொடுத்தது பற்றி குறிப்பீட்ட முதலமைச்சர், அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல.

தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்” இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர்  ”விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என #DravidianModel அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் #DMKWomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது” என்று குறிப்பிட்டுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.