ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர எதற்கு அவகாசம்? – மு.க.ஸ்டாலின் கேள்வி?

மாதம் ரூ.2,500 என்று சொல்லிவிட்டு, ஆயிரம் ரூபாயை கூட தராமல் இழுத்தடிக்கிறதுதான் உங்கள் மாற்றமா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கும் ரூ.1000 திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு அவகாசம் தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “முதலமைச்சர் அவர்களே,

மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.

ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்து சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?

மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.