ஏழைகளின் பசியை போக்கும் வகையில் அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக புதிதாக 10 அரசு மற்றும் கலை பண்பாட்டுக் கல்லூரிகள் திறப்பதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இத்திட்டம் செயல்படுத்த உள்ள பகுதிகளில் உள்ள கல்வி குழும தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சக்கரபாணி, கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்தாண்டு 5 கல்லூரிகளை தொடங்கவும், அடுத்தாண்டு 5 கல்லூரிகள் தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஊதிய நிலுவை இல்லை என்று தெரிவித்த அமைச்சர், கோயில்களுக்கு இறை பசியோடு வருபவர்களுக்கு ஆண்டவனும், வயிற்று பசியோடு வருபவர்களுக்கு முதலமைச்சரும் பசியாற்றுவார்கள். மேலும் கொரோனா 3ம் அலை தொடர்ந்நு அச்சுறுத்தி வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்கள் திறப்பதில் சாத்தியமில்லை. கொரோனா முழுவதுமாக குறையும் பொழுது அனைத்து நாட்களும் செயல்பட உத்தரவிடப்படும் எனவும் அவர் கூறினார்.