கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் நேற்று வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானே இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் வியாழனன்று வெளியான இந்த படத்தின் முதல் நாள், முதல் காட்சி அதிகாலை 5 மணிக்குத் திரையிடப்பட்டது. 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், குறிப்பாகக் காலை சிறப்புக் காட்சிகள் மட்டும் 200 திரைகளிலும் வெளியானது. இதுவரை வெளியான சிம்பு படங்களில் இந்த படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல்களே கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக முணுமுணுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் மட்டும் வெளியான முதல் நாளிலே சுமார் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததோடு சென்னையில் மட்டும் சுமார் 90 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று படக்குழு சார்பாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் பேசிய இயக்குநர் கவுதம் “நல்லா தூங்கிட்டு படம் பார்க்க வாங்க சொன்னேன், ஆனால் அதைப் பெரிதாக்கிவிட்டார்கள். என் மற்ற படங்களை விட இந்த படத்திற்கு நேர் மறை விமர்சனங்கள் வந்துள்ளன. விமர்சனங்களே தேவையில்லை எனச் சிந்தித்ததுண்டு. இன்னொருத்தர் பிழைப்பில் மண் போடுவது தான் விமர்சனம் எனச் சிந்தித்திருக்கிறேன்” எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய ஐசரி கணேஷ் “இந்த படம் ஹிட் இல்லை பம்பர் ஹிட் தயாரிப்பாளராக இதை நான் சொல்கிறேன். தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் படம் நன்றாக ஒடி கொண்டிருக்கிறது.
நான் நினைத்ததை விட அதிகமாகப் படம் வசூலித்துள்ளது படத்தின் கதாபாத்திரமாகவே சிலம்பரசன் இருந்தார். அவரது நடிப்பை நான் ரசித்தேன்.இந்த நடிப்புக்கு அடுத்த வருடம் சிலம்பரசனுக்கு ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் அதற்கு அவர் தகுதியானவர்.
இது கவுதம் வாசுதேவ் படம் மாதிரி இல்லை, ஆனால் இந்த மாதிரியும் படம் செய்ய முடியும் என அவர் நிறுப்பிது விட்டார். வெந்து தணிந்தது காடு படத்தின் 2 பாகம் நிச்சயம் உண்டு அதற்கான ஆயத்த பணிகளை ஜெய மோகனும் கவுதம் வாசுதேவ் செய்து வருகிறார்கள்.
அது தயார் ஆன உடன் அதை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும். எனக் கூறிய அவர், அது ஜனரஞ்சகமாகவும், ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் ”எனக் கூறினார்.