சென்னை ஓபன் டென்னிஸ்-செக் குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன்

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், மேக்டா லினெட் (போலந்து) – லிண்டா ஃப்ரூவிர்டோவா (செக் குடியரசு) விளையாடினர். இதில், லிண்டா 4-6, 6-3, 6-4 என்ற…

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், மேக்டா லினெட் (போலந்து) – லிண்டா ஃப்ரூவிர்டோவா (செக் குடியரசு) விளையாடினர். இதில், லிண்டா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

முதல் செட்டை 6-4 என லினெட் கைப்பற்றியதை அடுத்து, இரண்டாவது செட்டை 6-3 என லிண்டா கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டம் 4-1 என இருந்தது. இதில் லினெட் 4 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார்.

70% வெற்றிக்கு சாதகமான சூழலில் லினெட் விளையாடினார். மூன்றாவது செட்டில் 4-3 என லினெட் முன்னிலை வகித்தார்.

கடைசி செட்டை வெல்ல இரு தரப்பினர் இடையே கடும் போராட்டம் இருந்தது. மூன்றாவது செட் 5-4 என லிண்டா முன்னிலை  பெற்றார். கடைசியாக 6-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார் லிண்டா.

இதன்மூலம், சாம்பியன் பட்டத்தை வென்றார் 17 வயதான செக் குடியரசை சேர்ந்த லிண்டா.

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் 2022 WTA 250 சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் WTA 280 புள்ளிகள், கேடயம் மற்றும் 26 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை வென்றார் 17 வயதான செக் குடியரசின் லிண்டா ஃப்ரூவிர்டோவா.

இதனிடையே, இரட்டையர் பிரிவில் கனடாவின் கேப்ரியல்லா தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி VS ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா, ஜார்ஜியாவின் நடேலா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

1 மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் கனடாவின் கேப்ரியல்லா தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடி 6-1, 6-2 என இரண்டு நேர் செட்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.