இதுவரை எந்தெந்த பிரபலங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டது, எப்போது மீட்கப்பட்டது என்பது பற்றி பார்ப்போம்.
நாம் அன்றாடம் பயன் படுத்தும் சமூக வலைதளப் பக்கங்கள் பாதுகாப்பானதா எனாறால், இல்லை என்பதுதான் உன்மை. தொழில் போட்டி முதல் மற்றவர்களின் அந்தரங்களை திருடுவது வரை பல காரங்களுக்காக இந்த ஹேக்க்கிங் நடத்தப்படுகிறது.
குறிப்பாக இதில் பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்கள் அதிகம் ஹேக் செய்யப்படுவது ஒரு வாடிக்கையாகி விட்டது. ஒரு சாமான்யனின் சமூக வலைத்தள பக்கத்தை ஹேக் செய்வதால் ஹேக்கர்களுக்கு எந்த பயனும் இல்லை எனவே, பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்களை குறிவைக்கின்றனர். 
நடிகை திரிஷாவின் டுவிட்டர் பக்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. பீட்டா அமைப்பின் ஆதரவாளரான நடிகை திரிஷா ஜல்லிக்கட்டுக்கு தெரிவித்த கருத்தை தொடர்ந்து அவர் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.
கடந்த 2021 ஜூலை மாதம் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அத்துடன் அவர் பக்கத்தில் இருந்த எல்லா பதிவுகளு நீக்கப்பட்டது. கடந்த 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஷ்புவின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சினித்துறைய சேர்ந்தவங்களுக்கு மட்டு இல்லாமல் அரசியல் தலைவர்களுக்கும் இந்த பிரச்சனை நடந்துருக்கிறாது. தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கம் கடந்த செப்டம்பர் மாதம் ஹேக் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் பிசியான நடிகையான ராதிகாவின் டுவிட்டர் கணக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்த அக்கவுண்ட் மீட்க்கப்பட்டது.
சினிமா நடிகர், நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்களில் இருந்து வெளியானது. இந்த சம்பவம் அந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. இது குறித்து தன் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக பாடகி சுசித்ரா தரப்புல இருந்து கூறப்பட்டது.
அடுத்து கடந்த 2021 வது வருடம் நடிகர் பார்த்திபனோட பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. “அறிவுள்ளவன் படமெடுக்கலாம். அறிவு மிகுந்தவர் ரசிகராகலாம். ஆனால் அறிவுக்கே பிறந்த சில இனிய எதிரிகள் ஹேக் செய்கிறார்கள். அதை எதிர்கொண்டு அந்த அரக்கர்களை வதம் கொள்ள சற்றே நேரம் தேவை. அதுவரை அவ்விளம்பரங்களுக்காக என்னை மன்னியுங்கள்” என நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர்ல் பதிவிட்டார்.
அடுத்ததாக நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. கடந்த 2015 ஆவது வருடம் அவரின் டுவிட்டர் பக்கம் ஹேக் ஆனது. ஹேக் பண்ணது மட்டும் இல்லாமல் அவரின் அக்கவுண்டில் சில ஆபாச வீடியோக்கள சைபர் குற்றவாளிகள் பகிர்ந்ததால் சர்ச்சை ஏர்ப்பட்டத்து.
தமிழ் சினிமாவோட முன்னணி நடிகர்களுல் ஒருத்தர் தனுஷ். இவரின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனல் கடந்த மே மாசம் முடக்கப்பட்டது. அந்த சேனலில் இருந்த பாடல்கள் வீடியோக்கள் எல்லாம் நீக்கப்பட்டது. இதில் இந்திய அளவில் ஹெட் ஆன “ரௌடி பேபி…”, “டாணு டாணு…”பாடல்களும் அடங்கும். இதே போல் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது.
சமூக வலை தள பக்கங்கள் மூலம் நடிகர் சித்தார்த் பல சமூக கருத்துக்கள பதிவிட்டு வருகிறார். கடந்த 2020 வது வருடம் நடிகர் சித்தார்த்தின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
இவர்கள் மட்டு இல்லாம, நடிகைகள் ஸ்ருதி ஹாசன், பார்வதி, ஹன்சிகா உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்களின் சமூக வலைதல பக்கங்கள் முடக்கப்பட்டது. பின் சைபர் வல்லுனர்களின் முயற்சியில் சிலரின் அக்கவுண்ட் மீட்கப்பட்டது.







