“யார் தவறு செய்தாலும், அதிமுக ஆட்சியில் தண்டனை வழங்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி!

யார் தவறு செய்தாலும் அதிமுக ஆட்சி வந்த உடன் தண்டனை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுச்சாமி புரம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பரப்புரை மேற்கொண்டார். இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட முன்னாள் அமைச்சர்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசியவர், “எதிர்கட்சி தலைவராக இருந்த போது மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி பற்றி பேசிய காணொளி வீடியோ காட்டி பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களை கட்சி சேர்ப்பது, திமுக இது கூட்டணி தர்மமா என்று கேட்கிறது. ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜி தப்ப முடியாது. யார் தவறு செய்தாலும் அதிமுக ஆட்சி வந்த உடன் தண்டனை வழங்கப்படும். தேர்தல் நேரத்தில் செந்தில்பாலாஜி கொடுத்த வாக்குறுதி என்னாச்சு. இந்த எழுச்சி பயணத்தை தடுக்க ஆயிரம் தடைகள் போட்டார்கள். எம்.ஜி.ஆர் பாடலை பாடி கரூரை காப்போம் என்றார்.

30 ஆயிரம் கோடி கொள்ளையடித்த திமுக மீண்டும் வர வேண்டுமா. தேர்தலில் திமுகக்கு முடிவு கட்டப்படும். திமுக நிர்வாகிகள் போதை பொருட்கள் உடந்தையாக உள்ளதால் மு.க.ஸ்டாலின் அதனை கவலை படவில்லை. இந்த மழையில் கூட மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதிகாரி சுதந்திரமாக செயல்படுங்கள், இப்போது கிட்னி கூட விட்டு வைக்கவில்லை.

அதனையும் திருடுகிறார்கள், குவாரி உரிமையாளர்களை மிரட்டி ஒரு நாளைக்கு 10 கோடி லஞ்சமாக பறிக்கிறார்கள். திமுக ஆட்சியில் விலை வாசி உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சி வந்த உடன் தீபாவளி மகளிர்க்கு சேலை வழங்கப்படும். கரூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட இடம் அருகில் உள்ள இடங்கள் அனைத்தும் திமுகவினர் வசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.