முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை அவசியம்?

யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிடுள்ளது.

பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்ட நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை உடையவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், வெளிநாட்டுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களில் 2% பேர் ரேன்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ரேன்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், பரிசோதனை மாதிரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என அரசு சுகாதார நிலையங்களில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 16 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!

Niruban Chakkaaravarthi

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது – துணை முதல்வர்

Gayathri Venkatesan