பூ ஒழுங்காக பூக்காததால் வதை முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பூந்தோட்ட ஊழியர்கள்

பூந்தோட்டத்தில் இருக்கும் பூக்கள் சரியாக பூக்காததால் தோட்டத்தில் ஊழியர்களை அந்நாட்டு அதிபர் வதை முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளார். உலகம் முழுவதும் பல மொழிகளை கொண்ட பல நாடுகள் இருந்தாலும் வட கொரியா எப்போதுமே வித்தியாசமான நடவடிக்கையை…

பூந்தோட்டத்தில் இருக்கும் பூக்கள் சரியாக பூக்காததால் தோட்டத்தில் ஊழியர்களை அந்நாட்டு அதிபர் வதை முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

உலகம் முழுவதும் பல மொழிகளை கொண்ட பல நாடுகள் இருந்தாலும் வட கொரியா எப்போதுமே வித்தியாசமான நடவடிக்கையை கையாள்வதன் மூலம் தனி கவனம் பெறுகிறது. சிறு தவறுகளுக்கும் கடுமையான தண்டனைகளை கொடுக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு கையாண்டு வருகிறது. முக்கியமாக வட கொரியாவில் நிலவும் சூழல் என்ன என்பதே யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது. இந்த நிலையில் பூந்தோட்டத்தில் இருக்கும் பூக்கள் சரியாக பூக்காததன் காரணமாக அந்த பூந்தோட்ட ஊழியர்களை வதை முகாம்களுக்கு அனுப்பிவைத்துள்ளார் கிம் ஜாங் உன்.

கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல்-ன் பிறந்தநாள் பிப். 16 தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு மது அருந்துவது, சிறிப்பது, சந்தையில் பொருட்களை வாங்குவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போன்ற செயல்களுக்கு தடைவிதித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது அந்நாட்டு அரசு.

அதன் படி பல கட்டுப்பாடுகளுடன் நேற்று வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்-ன் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது கிம்ஜாங்லியா என்ற மலரை சரியாத மலரச் செய்யவில்லை என்று சில பூந்தோட்ட ஊழியர்களை வதை முகாம்களுக்கு கிம் ஜாங் உன் அனுப்பிவைத்தார்.

இது குறித்து பேசிய ஊழியர்கள், கிம்ஜாங்லியா மலர் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் -க்கு மிகவும் பிடித்தமான மலர். இந்த மலருக்கு அழியா மலர் என்றும் அவர் பெயரிட்டுள்ளார். பிறந்தநாள் நிகழ்வின் போது கிம்ஜாங்லியா பூ பூக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ஊழியர்களை 6 மாத காலத்திற்கு வதை முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளார் என்று தெரிவித்தனர்.

முன்னாள் அதிபருக்கு பிடித்த இந்த மலரானது 1988ம் ஆண்டு ஜப்பானிலிந்து மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். மேலும் இந்த பூ பூக்கவேண்டுமானால் அதற்கு சரியான வெப்பநிலை, காலநிலை இருக்கவேண்டும். அதற்கு அந்த கார்டனை முறையாக கண்காணித்து வந்தால் மட்டுமே பூ மலர சாத்தியம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.