ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு ? – டெல்லியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதற்காக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.   ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக டெல்லி…

ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதற்காக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

 

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக டெல்லி சட்டமன்றத்தில் இன்று ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தாலோ எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுப்பார்கள்.

 

ஆனால், டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி தனக்குத்தானே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கான நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அம்மாநில சட்டமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி பாஜக வசம் சென்றதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் மக்கள் பலரும் தன்னிடம் தொடர்ச்சியாக இவ்விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்புவதாகவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது? என்பது தொடர்பாக நிரூபிக்கவும் வகையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.