ஐபிஎல் போட்டியைக் காண வந்த ரசிகையின் புகைப்படம் வைரல்!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தைக் காண வந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த புதன்கிழமை லக்னோ-கொல்கத்தா அணிகளுக்கு இடையே…

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தைக் காண வந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த புதன்கிழமை லக்னோ-கொல்கத்தா அணிகளுக்கு இடையே 66வது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடெமி மைதானத்தில் நடைபெற்றது.
அந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே இப்படி விக்கெட் இழப்பின்றி ஒரு அணி விளையாடியது இதுவே முதல் முறையாகும்.

அந்த ஆட்டம் மட்டுமல்லாமல், அந்த ஆட்டத்தைக் கண்டு ரசிக்க வந்த இளம்பெண் ஒருவரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். கொல்கத்தா அணி விளையாடிக் கொண்டிருந்தபோது பார்வையாளர் மாடத்திலிருந்து  கைகளைத் தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினார் அந்த இளம்பெண். அவர் எந்த அணிக்கு ஆதரவு என்பது பற்றி தெரியவில்லை. அவரது பெயர் ஆர்த்தி பேடி என்பதும், அவர் நடிகை மற்றும் நடனக் கலைஞர் என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஐபிஎல் சீசனில் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஆர்த்தி பேடியின் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.