31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுச்செயலாளர் என்பவர் யார்? அவருக்கான பணிகள் என்ன?

அதிமுக-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் என்ன என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..

 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம், மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே, சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை நடைபெறுகிறது. இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்தது. மேலும் பொதுக்குழுவுக்கான தீர்மானத்தை இறுதிசெய்யும் குழுவின் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதனிடையே, நாளை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கியூஆர் ஸ்கேன் மூலம் சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

அதிமுக-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக மூத்த நிர்வாகிகளும் தெரிவித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் இந்த பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர்..

1. அதிமுகவின் நிர்வாக ரீதியிலான அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார்

2. தமிழ்நாட்டில் உள்ள அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்

3. நிர்வாக வசதிக்காக பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து துணைப் பொதுச்செயலாளர்களையும் பொருளாளரையும் நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு

4. அவைத்தலைவர், பொருளாளர், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள், நியமன உறுப்பினர்களை கொண்டு செயற்குழுவை பொதுச்செயலாளரால் மட்டுமே அமைக்க முடியும்

5. செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுதல், உட்கட்சி தேர்தலை நடத்துதல், வரவு செலவு கணக்கை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்

6. அதிமுகவின் சட்ட விதிகளுக்கு மாறாக நடக்கும் நிர்வாகிகளை நீக்குவதற்கோ, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு

7. பொதுக்குழு – செயற்குழு கூடாத நேரங்களில் அரசியல் நிகழ்ச்சிகள், கொள்கை, திட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு. அடுத்த பொதுக்குழுவில் அதற்கான ஒப்புதலை பெறலாம்

8. தேவையை பொறுத்து, வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கவோ, குடுக்கவோ பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உண்டு

9. அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையொப்பமிட முடியும்

10. அதிமுக உட்கட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தவிர்த்து கூடுதலாக குறிப்பாக பெண்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு..

 

இவ்வாறு பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் யாருக்கு கிடைக்க போகிறது என்பது நாளை தினம் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading