முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

இந்தியாவின் முதல் தேசியக்கொடியை ஏற்றியவர் யார்?

இந்திய நாடு விடுதலை அடைந்ததற்கு பிறகு முதன் முதலில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

வெள்ளையரின் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என மகாத்மா காந்தியுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகமது அலி ஜின்னா வலியுறுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் பிரிவினைக்கு குரல் எழுப்பினர். இதன் விளைவாக, நமது நாட்டின் பல பகுதிகள் தாரைவார்க்கப்பட்டு பாகிஸ்தான் என்ற புதிய நாடு உதயமானது. கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், நமது நாட்டுக்கு அதே நாளின் நள்ளிரவில்தான் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தது.

 

இதையடுத்து, டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி இந்திய நாட்டின் முதல் தேசியக் கொடியை ஜவஹர்லால் நேரு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


மேலும் அன்றைய நாளில் இந்திய நாட்டின் தேசியக் கொடி கொல்கத்தா மும்பை உள்ளிட்ட பெருநகரங்களிலும் ஏற்றி வைக்கப்பட்டன. அகிம்சை முறையின் மூலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தை இந்திய மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் ‘ஜாக்’ கொடி இறக்கப்பட்டு, கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் முதன்முதலாக இந்திய நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

 

அன்றைய நாளில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் சிறப்பு பேழையில் காட்சிப் பொருளாக வைத்து பாதுகாத்து வருகின்றனர். கண்ணாடி பதித்த மரத்தினால் செய்யப்பட்ட பேழையில் வைக்கப்பட்டுள்ள இந்த பட்டு கொடி கால சூழ்நிலையால் சேதமடைவதை தடுக்க அந்தப் பேழைக்குள் ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த பேழை வைக்கப்பட்டுள்ள அறைக்குள் 24 மணி நேரமும் குளிர்சாதன வசதி பராமரிக்கப்பட்டு வருகிறது. தூசு மற்றும் வெளிப்புற வெளிச்சம் கொடியை பாதிக்காத அளவு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வரலாற்று சிறப்புக்குரிய தேசியக் கொடியைக் காண்பதற்காக பார்வையாளர்கள் அந்த அறைக்குள் நுழையும்போது மட்டும் பேழைக்குள் விளக்குள் எரியும் வகையில் உயரிய தொழில்நுட்பம் இங்கு கையாளப்பட்டு வருகிறது.

 

சுதந்திரம் என்பது தானே கிடைக்கவில்லை. அதற்காக பல உயிர்களை நாம் தொலைத்துள்ளோம், பல குடும்பங்களின் கண்ணீர் துளிகள் இந்த மண்ணில் கலந்துள்ளன. உயிர்விட்ட வீரர்களின் தியாகத்தை போற்றி 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த வேளையில் அவர்களை நினைவு கூர்ந்து, பாரதம் எங்கும் பட்டொளி வீசும் தேசிக்கொடியை வணங்குவோம்..

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜவுளித்துறையில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது- மத்திய அமைச்சர்

G SaravanaKumar

நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை; அமைச்சர் ஐ.பெரியசாமி

Halley Karthik

விடுதலைப் போருக்கு வித்திட்ட பண்டிகை விநாயகர் சதுர்த்தி-அண்ணாமலை

Web Editor