கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலானவற்றில், தொங்கு சட்டப்பேரவை அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மேலும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மியில் 209 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக 918 பேர் களத்தில் உள்ளனர்.
இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு செய்தி சேனல்களும் நிறுவனங்களும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், Zee News நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 103 முதல் 118 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 79 முதல் 94 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 முதல் 33 தொகுதிகளிலும், மற்றவை 2 முதல் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறப்படுகிறது.
ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 94 முதல் 108 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 85 முதல் 100 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 தொகுதிகளிலும், மற்றவை 2 முதல் 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.
அதேபோல் TV9 நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 99 முதல் 109 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 88 முதல் 98 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 26 தொகுதிகளிலும், மற்றவை 0 முதல் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.
NEWS NATION நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக கூட்டணி 114 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 86 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.
NEWS X நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 103 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 94 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் வெற்று பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
CVoter நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 100 முதல் 112 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 83 முதல் 95 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 29 தொகுதிகளிலும், மற்றவை 2 முதல் 6 தொகுதிகளிலும் வெற்று பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.







