“யாரு சாமி நீங்க”… Snacks-காக செலவு செய்த பணத்தை முன்னாள் காதலியிடம் திருப்பி கேட்ட நபர்… தீயாய் பரவும் பதிவு!

நபர் ஒருவர் தனது முன்னாள் காதலிக்கு திண்பண்டத்திற்காக செலவு செய்த பணத்தை திரும்ப கேட்டது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

திவ்யா என்ற எக்ஸ் பயனர் தனது முன்னாள் காதலனுடனான Chat-ன் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கொண்டார். மேலும் அதனுடன், “என் முன்னாள் காதலன் நாங்கள் காதலித்த போது அவர் எனக்கு அனுப்பிய சிற்றுண்டிகளுக்கான பணத்தைத் திரும்பக் கேட்கிறார். இது பிரிவின் எந்த நிலை?” என்று குறிப்பிட்டிருந்தார். அதில், முன்னாள் காதலன், “இப்போது இது முடிந்துவிட்டது. நாம் காதலித்தபோது நான் உங்களுக்கு அனுப்பிய அனைத்திற்கும் பணத்தைத் திரும்பப் பெற விரும்புகிறேன்” என்று எழுதியிருந்தார்.

இதையும் படியுங்கள் : Uber ஓட்டுநர் செய்த அதிர்ச்சி செயல்… மிரண்டு போன பயணிகள்.. வீடியோ வைரல்!

பின்னர், டெலிவரி செயலிகள் மூலம் ஆர்டர் செய்த பொருட்களுக்கான விலைப்பட்டியல்களின் ஸ்கிரீன்ஷாட்களை அவர் அனுப்பியிருப்பதைக் காண முடிகிறது. அந்த பில்களில், உணவுகள், குளிர்பானங்கள், ஜெல்லி, வெங்காயம், தக்காளி போன்ற மளிகைப் பொருட்களும், மக்கானா, சிப்ஸ் மற்றும் பிற சிற்றுண்டிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வைரல் பதிவு இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இதை பதிவிட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு பயனர், “இப்போதெல்லாம் உறவுகள் பயமாக இருக்கின்றன. சிற்றுண்டிகளுக்குச் செலவிடும் பணத்தின் கணக்கை அவர் வைத்திருப்பது என்ன?” என்றார். மற்றொருவர், “நான் அதிர்ஷ்டசாலி. என் முன்னாள் காதலர் பிரிந்தபோது எனக்கு சில விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார்” என குறிப்பிட்டார். மேலும், ஒருவர்  “கண்காணிப்பது பைத்தியக்காரத்தனமானது” என குறிப்பிட்டார். இன்னும் சிலர், “அவருக்கான பணத்தை திரும்ப கொடுங்கள்” என்றும் “அவருக்கு முழு ஆண்கள் சமூகத்திடமிருந்தும் மரியாதை உண்டு” என தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.