தேமுதிக எந்த அணியில் உள்ளதோ அந்த அணியே ஆட்சியை அமைக்கும்! – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை மதுரவாயல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக இருந்தாலும் அல்லது தனித்து போட்டியிடுவதாக இருந்தாலும் 234 தொகுதிகளிலும் போட்டியிட…

சென்னை மதுரவாயல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக இருந்தாலும் அல்லது தனித்து போட்டியிடுவதாக இருந்தாலும் 234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மக்களுக்கு நல்லது செய்யவே தேமுதிகவை விஜயகாந்த் ஆரம்பித்ததாகவும், அவரது எண்ணம் நிறைவேறும் வரை கட்சியினர் அயராது உழைத்திட வேண்டும் என்றார். தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்த இறுதி முடிவை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் எனக்கூறிய பிரேமலதா, தேமுதிக எந்த அணியில் உள்ளதோ அந்த அணி தான் ஆட்சியில் இருக்கும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply