தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில், போலிசோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.